Category:
Created:
Updated:
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வு களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில விசேட நடவடிக்கையின்பது குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன இன்றைய தினம் குறித்த இரண்டு வாகனங்களும் நேற்றையதினம் உழவு இயந்திரமும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் -55