முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சி.எஸ்.கர்ணன். இவர், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், மூத்த பெண் வக்கீல்கள், ஐகோர்ட்டு பெண் ஊழியர்கள் குறித்து அவதூறாக பேசி பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்ளிட்டோர் கொடுத்த புகார்கள் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி கர்ணனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்குகளில் அவருக்கு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டு, ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுக்களை தள்ளுபடி செய்தன. இதையடுத்து கர்ணன் மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், நிபந்தனை அடிப்படையில் கர்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்
நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.