Category:
Created:
Updated:
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வெள்ளியன்று (19-02-2022) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்து உள்ளது என்றும் இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வெள்ளி இரவு புகுந்த காட்டுயானைகள் 20க்கும் மேற்பட்ட பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தி உள்ளன.ஆகவே குறித்த பிரதேசத்தினை பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைத்து தங்களுடைய பயிர்களைப் பாதுகாத்து தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அதேநேரம் தற்போது இந்த யானைகளால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்பீடுகளை பெற்று தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்