
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசியமானதும் அவசரமானதுமான டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது இன்றைய தினம்(18-02-2022) மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதானமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு பரவாமல் இருப்பதற்கான அவசியமானதும் அவசரமானதுமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தினை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வி.விஜிதரன் வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.