Category:
Created:
Updated:
அரசிடம் நிதியில்லாத பட்சத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.4 கோடியில் சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறினார்.
புதுவை அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் களுக்காக சுமார் ரூ.4 கோடி செலவில் 11 புதிய சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. மாநில அரசிடம் நிதியில்லாத பட்சத்தில் வீண் செலவு ஏன் செய்ய வேண்டும். சொகுசு கார்களில் வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பொதுமக்கள் தட்டிக்கேட்க வேண்டும்.
புதுவையில் முதல் அமைச்சர் ரங்கசாமி பொறுப்பு ஏற்றபின் ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் தொழிற்சாலை, கடைகளில் மாமூல் கேட்டு வசூலித்து வருகிறார்கள். இதனை காவல்துறை கண்டுகொள்ளாமல் ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.