Category:
Created:
Updated:
கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. நேற்றைய தினம் அங்கு 51,570 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 42,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,25,669 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் ஏற்பட்ட 10 உயிரிழப்புகள் ஏற்பட்டன். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 54,395 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 38,458 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56,12,993 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 3,57,552 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.