
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களும் சாரதிகள் 5 வரும் 4 சந்தேக நபர்களும் பொலிசாரல் கைது
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளம் நெத்தலியாறு பகுதியில் பகுதியில் 25.01.2022 அன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகள் 5 வரும் மற்றும் சட்டவிரோகமாக உழவுயிந்திரத்திற்கு ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்களும் பொலிசாரல் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு 27.01.2022 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டனர். இதன்போது 5 உழவுயிந்திரங்களுக்கும் இலக்கத்தகடு இல்லாமை, வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமை, மது போதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் பொலிசாரால் முன்வைக்கப்பட்டது.இதன்போது குறித்த வழக்கிற்காக குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் 1150000 தண்டப்பணம் மன்றினால் அறவிடப்பட்டது.கிளிநொச்சி நீதிமன்றில் அதிக தொகையில் தண்டம் அறவிடப்பட்டமை இதுவே முதல் முறையாகும் என தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.