நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
பிரதான கட்சிகள் இன்னமும் கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீட்டை நிறைவு செய்யாததால் வேட்பு மனு தாக்கல் இன்னமும் விறுவிறுப்பு அடையவில்லை.
இதற்கிடையே தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக பார்வையிட்டு தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கவிட்டு வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையினர் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்களையும், பணத்தையும் கைப்பற்றி வருகிறார்கள்.
இதுதவிர தேர்தல் பார்வையாளர்களையும் தமிழக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.