Category:
Created:
Updated:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த வைகோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. தற்போது சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.