கேரளாவில் இன்று 50,812 பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,31,945 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 47,649 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 55,41,834 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,36,202 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 311 பேர் (இன்று மட்டும் 8 பேர்) உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் கொரோனா புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் இன்று சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,191 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.