Category:
Created:
Updated:
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.