Category:
Created:
Updated:
துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர்களை வரவேற்க இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.