
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அலி சப்ரி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்றைய தினம் பொதுமக்களுக்கான நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச உயரதிகாரிகள் பொலிசார் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வு தொடர்பிலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் பாரிய ஆபத்து ஏற்படும் என்ற விடயம் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதே நேரம் மாவட்டத்தில் சிறுவர்கள் போதைப் பொருள் பாவனை மற்றும் கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு என்பவற்றிற்கு சிறுவர்களை பயன்படுத்துகின்ற நிலைமை அதிகளவில் காணப்படுவதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வர வேண்டி இருப்பதாகவும் சிறுவர்களை இவ்வாறான குற்றச்செயல்களில் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் போலீசார உள்ளிட்டோர் கலந்துகண்டிருந்தனர்.