ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதலாம். விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் மேலே குறிப்பிட வேண்டும். ஒரு மணி நேர தேர்வுக்கு பதில்3 மணி நேர தேர்வு நடைபெறும் என்றும் கூகுள் கிளாஸ்ரூம் அல்லது E-Mail மூலம் வினாத்தாள் மாணவர்களுக்கு அனுப்பப்படும்.
தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். நேரில் வந்து தரக்கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.