
கிளிநொச்சி மாவட்டத்தில் 14 தொடக்கம் 19 வரையான வயதினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி
கிளிநொச்சி மாவட்டத்தில் 14 தொடக்கம் 19 வரையான வயதினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் (24-01-22022) திங்கட்கிழமை முதல் மேற்கொள்ள இருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசியேற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 14 தொடக்கம் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஏற்கனவே முதற்கட்ட தடுப்புசி பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்கும் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட உள்ளது என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்இதே நேரம் தொற்று நோய்களுக்கான சிகிச்சை பெற்று வருகின்ற கிளினிக் நோயாளர்களின் பத்துக்கும் குறைவானவர்களே மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்கின்ற நிலை கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்றது. இந்த மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை கிராமங்கள் தோறும் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.