Ads
ஆந்திர அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு
ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் கொண்டு வர இருந்த மூன்று தலைநகரங்கள் திட்டம் விமர்சனங்கள் வந்ததை அடுத்து கைவிடப்பட்டது. இதையடுத்து இப்போது ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களுக்கும் ஒரு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே போல ஆந்திர அரசின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தும் புதிய சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் வரும் திங்கள் அன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
Info
Ads
Latest News
Ads