Category:
Created:
Updated:
இங்கிலாந்தின் லிவர்பூலின் புறநகர்ப் பகுதி ஐக்பர்த்தை சேர்ந்தவர் காரா சுட்டன்( 26). இவர் தனது காதலன் ஜேம்சுடன் ( 25 ) விடுமுறையை கொண்டாட கடந்த 5 மாதங்களூக்கு முன் சைக்கிளில் நார்த் வேல்ஸில் உள்ள கோட்-ஒய்-ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று அழகை ரசிக்கும் போது நிலைதடுமாறி அவர் மலை உச்சியில் இருந்து சைக்கிளோடு கீழே விழுந்தார். காரா அதிர்ஷ்டவசமாக தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டாத காரணத்தால் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினார் .
எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிர் பிழைத்தார்.
ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு உரிய நேரத்திற்கு கொண்டு சென்றதால் ஐந்து மாதத்தில் மருத்துவர்களின் உதவியினால் மீண்டு வந்துள்ளார் காரா.