Category:
Created:
Updated:
தமிழகத்தில் இன்று 750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 021 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 8,616 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,397 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,388 ஆக உயர்ந்துள்ளது.