Category:
Created:
Updated:
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி மக்கள் அபிப்பிராயங்களை அறிவதற்கு கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தது. இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட கல்வியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.