
70% ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களாலேயே டெல்லியில் அரசு அமைந்தது - கெஜ்ரிவால்
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பணியை துவங்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் டெல்லி முதல் மந்திரியான கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என கூறினார்.
இந்த நிலையில், மொகா நகரில் கெஜ்ரிவால் இன்று பேசும்போது, பஞ்சாபில் போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி சரீந்தர் சிங் சன்னியை சாடி பேசியுள்ளார்.
இதன்பின் அவர் லூதியானா நகரில் ஆட்டோ ஓட்டுனர்கள் முன்னிலையில் பேசும்போது, 70% ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களாலேயே எங்களுடைய அரசு அமைந்தது. டெல்லியில் எந்தவொரு ஆட்டோ ஓட்டுனரிடமும் எங்களை பற்றி கேளுங்கள். எங்களை பற்றி அவர் புகழ்ந்து கூறவில்லை எனில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.