சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டுகின்றார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிலயைில், வெள்ள அழிவு மற்றும் பசளை இன்மையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அதைவிட விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.அன்றாட வாழ்வியல் வாழ்க்கையில் வாழும் மக்களும் சரி, அரச உத்தியோகத்தர்களும் சரி 2 வாரங்கள் கூட வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியாத நிலையில் திணறுகின்றார்கள். ஆனால் இன்று வந்துள்ள அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் என்பது வெறும் மாயையான வரவு செலவு திட்டமாக இருக்கின்றது.எந்தவொரு சமூக நலன் சார்ந்து அல்லது, வறுமையை போக்கக்கூடிய அளவிலான வரவுசெலவு திட்டமாக இது அமைந்திருக்கவில்லை. கடன்பட்டு இந்த நாட்டை கொண்டு நடத்துகின்ற நிலையிலும் இன்று தாயின் கருவில் இருக்கின்ற பிள்ளையின் தலையைில்கூட கடன் சுமையை சுமத்தக்கூடிய நிலையில்தான் இந்த அரசு போய்க்கொண்டிருக்கின்றது.அதற்கு இந்த அரசு மாத்திரம் காரணமல்ல. கடந்த காலங்களில் இருந்த அரசும் இதற்கு காரணமாகத்தான் இருக்கின்றது. அதற்கு முன்னர் இருந்த இதே அரசு திவிநெகும நிதி மோசடியிலிருந்து பல பல மோசடிகள் பேசப்பட்டதாக இருக்கின்றது. பின்னர் வந்த ஆட்சியாளர்களில் மத்தியவங்கி பிணைமுறி மோசடியிலிருந்து மகாபொல உள்ளிட்ட மோசடிகளும் பேசப்பட்டதாக இருந்தது. தீர்வுகள் எட்டப்படவில்லை.தற்பொழுது உள்ள இந்த அரசும் தங்களுடைய குடும்ப ஆட்சிக்குள் அமைச்சர்களை உருவாக்கிவிட்டு விளையாட்டுப்பிள்ளைகள் போன்று காசுகளை மத்தியவங்க ஊடாக அச்சடித்துக்கொண்டு இன்றைக்கு பெரிய பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை எவ்வாறு சீர்ப்படுத்தலாம் என்ற எந்தவொரு சிந்தனைப்போக்கும் இல்லாமல் தொடர்ந்து இவ்வாறான பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளுவதென்பது ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் மக்களுடைய வாழ்வியலை பெரிதும் பாதிக்கும்.ஒருநேர உணவுக்குகூட மக்கள் அஞ்சுகின்ற நிலையில், கொலை கொள்ளை எனும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும் என்பது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாக இருக்கின்றது.காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு தீர்ப்பையும் சொல்லாமல், அல்லது எந்தவொரு விசாரணையையும் ஆக்கபூர்வமாக இதயசுத்தியுடன் முன்னெடுக்காமல் 300 மில்லியனை இந்த வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக இந்த வரவு செலவு திட்டத்தில் கூறுவதென்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கும்.சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் பூர்வாங்க விசாரணை ஒன்றை சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது. இந்த ஏமாற்றத்துக்கு எங்களுடைய மக்கள ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.எனவே இந்த அரசாங்கம் முதலில் பொறுப்புகூறலை இதயசுத்தியுடன் செய்வதற்கு தயாராக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கேட்கின்ற கோரிக்கையை செவிமடுக்கவேண்டிய தேவையும், கடப்பாடும் அவர்களிற்கு இருக்கின்றது. ஏனெனில் இசர்வதேசத்தில் தங்களை நல்லவர்கள்போல் காட்டிக்கொண்டு, மனித உரிமையை தாங்கள் மேம்படுத்துவதுபோலும் காட்டிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்த நிதி ஓதுக்கீட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்

  • 636
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads