
கிளிநொச்சியில் இன்று பகல் இடம்பெற்ற பாரிய விபத்து
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று (21) பகல் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.
இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த 15ம் திகதி விபத்து இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின் போது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.