Category:
Created:
Updated:
எந்தவொரு சக்தியுடனும் இணைந்து இந்த அரசாங்கத்தை விரைவில் கவிழ்ப்பதுடன், ஒருநாள் காலை விடிந்து எழும்பும்போது இரவு அரசாங்கம் கவிழ்ந்ததாக செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சிலர் உடனடியாக தம்முடன் இணைய விரும்பியபோதும் அதற்கு இன்னும் சிறிது காலம் கடக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.