Category:
Created:
Updated:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 789 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,16,421 ஆக அதிகரித்துள்ளது.
913 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,70,761 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 36,311 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 9,349 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 1,03,202 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,28,50,459 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு 0.8 சதவீதமாகும்.