Category:
Created:
Updated:
இலங்கையில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இன்று 695 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 551,540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது. 3,995 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.