Category:
Created:
Updated:
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தேஹங் அருகே, அசாம் ரைபிள் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அசாம் ரைபிள் படையின் கட்டளை அதிகாரி விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.