Category:
Created:
Updated:
இலங்கையில் ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்வது வழக்கம். எனினும் இந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 6 பேர் மின்னல் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது.
மழை குறைந்து வெள்ள நீர் வடிந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.