தம்பி மனைவியுடன் கள்ளக்காதலில் அண்ணன்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் தாவுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கோகுலராஜ். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளது.
கோகுலராஜின் பெரியப்பா சுப்பிரமணியின் மகன் கோபாலகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் பனை மட்டையிலிருந்து தும்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் கோகுலராஜ் வேலை செய்து வந்துள்ளார்.
கோபாலகிருஷ்ணனுக்கும், கோகுலராஜின் மனைவி முத்துலட்சுமிக்கும் கள்ள தொடா்பு ஏற்பட்டது. இருவரும் ஊரைவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் வெளியூா் சென்று விட்டனா். கோகுலராஜ் மற்றும் குடும்பத்தினா் இருவரையும் கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனா்.
இருவரையும் கண்டித்த குடும்பத்தினா் மீண்டும் கோகுலராஜூடன் முத்துலட்சுமியை சோ்த்து வைத்துள்ளனா். இருப்பினும், கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று புதுவலசை பகுதியில் சென்று கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை கோகுலராஜ், இவரது உறவினரான விஜயகுமார் உள்பட சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதை கோபாலகிருஷ்ணனின் சகோதரி இசக்கியம்மாள் தடுத்துள்ளார். அப்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. அங்கிருந்து தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை, அந்த கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த தேவிபட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று கோபால கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயமடைந்த இசக்கியம்மாள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக தேவிபட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, படுகொலை செய்து விட்டு தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனா்.