Category:
Created:
Updated:
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை முசுரம்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் 10.11.2021 வீட்டு முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மோட்டார் சைக்கிளினை பட்டப்பகலில் திருடிக்கொண்டு அதிவேகத்தில் பயணித்தவர் வீதிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளினை தருமபுரம் பொலிசார் மிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இதே பகுதியில் வீட்டில் நிறுத்தி வைத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை களவாடி ஒழுத்து வைத்திருந்த நிலையில், பருத்தித்துறை பொலிசாரால் பிடிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று பின்னர் குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இன்றைய சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்