Category:
Created:
Updated:
பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறி்த்த விபத்த சம்பவத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்தில் பியர் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. குறித்த இருவரில் ஒருவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.