
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மற்றும் கண்டாவளை கல்விக் கோட்டங்களை உள்ளடக்கி புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு கல்வி வலய அலுவலகம் பரந்தன் இந்து மகா வித்தியாலய வளாகத்தில் உள்ள பாடசாலை மண்டபம் ஒன்றிலேயே தனது பணியை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளது.தற்போது குறித்த அலுவலகத்துக்கான போதிய தளபாட வசதிகள் மற்றும் இதர வசதிக் குறைபாடுகள் அதிகளவில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதைவிட ஆளணி வள பற்றாக்குறைகளும் அதிகளவில் காணப்படுகின்றன எனவே இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ள மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் எதிர்கால வளர்ச்சி கருதி அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் காணியை விரைவாக வழங்கி கட்டட வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.