
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக வெளியிடங்களில் இருந்து கால்நடைகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என பிரதேச விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கால்நடைகள் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெளியிடங்களில் இருந்து தற்போது பெருமளவான கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதனால் குறித்த பிரதேசங்களில் கால்நடைகளால் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வெளியிடங்களில் இருந்து பெருமளவான கால்நடைகள் தங்களுடைய பிரதேசத்துக்கு மேய்ச்சலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் இதனால் தற்போது குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய செய்கைகள் மற்றும் மீள் நடுகை செய்யப்பட்ட தென்னை மரங்களையும் குறித்த கால்நடைகளை அழித்து வருவதாகவும்;
தென்னை செய்கையாளர்கள் தெரிவித்திருக்கும் அதேவேளை தங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகள் இல்லாத நிலையில் வெளியிடங்களில் இருந்து சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை தமது பிரதேசங்களுக்கு கொண்டு வந்திருப்பது மேலும் நெருக்கடி நிலையை தோற்றுவித்து இருப்பதாக இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.