
முதன் முறையாக பொது வெளியில் தோன்றி பேசிய தலீபான்கள் தலைவர்
முதன்முறையாக ஹைபதுல்லா அகுந்த்சாதா பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். இது தொடர்பாக வீடியோவோ, புகைப்படமோ எடுக்கப்படவில்லை. தனது பேச்சின்போது அரசியல் குறித்து எதுவும் பேசாத அவர்,முழுக்க முழுக்க மதம் குறித்து மட்டுமே பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி ஆட்சி அமைத்து உள்ளனர்.
தலீபான் அமைப்பின் ஆன்மிக தலைவராக உள்ள ஹைபதுல்லா அகுந்த்சாதா, அந்த அமைப்பின் உச்சபட்ச தலைவராகவும் கருதப்படுகிறார். இவர் இறந்துவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் ஹைபதுல்லா அகுந்த்சாதா நிலை தொடர்பாக மர்மம் நிலவிவந்தது.
இந்த நிலையில், முதன்முறையாக ஹைபதுல்லா அகுந்த்சாதா பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் அவர் பேசியுள்ளார். இது தொடர்பாக வீடியோவோ, புகைப்படமோ எடுக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட விடியோ தலீபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. தனது பேச்சின்போது அரசியல் குறித்து எதுவும் பேசாத அவர்,முழுக்க முழுக்க மதம் குறித்து மட்டுமே பேசியுள்ளார்.
தலீபான்களின் தலைவராக இருந்த முல்லா அக்தார் மன்சூர், அமெரிக்கப் படைகளால் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அந்த இயக்கத்தை ஹைபதுல்லா அகுந்த்சாதா வழி நடத்தி வந்தார். தலீபான்களின் ஷரியா நீதிமன்றத் தலைவரான அகுந்த்சாதா, 1990-ஆம் ஆண்டில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது மத விவகாரங்களில் முக்கிய முடிவு எடுத்து வந்தார். குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை பொது இடத்தில் கொல்வது, பெண்களுக்கு கல்வி கற்க தடை விதித்தது போன்ற மிக கடுமையான சட்டங்களை அமல் படுத்தியவர்.