Category:
Created:
Updated:
ஜி20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘ஒரு கட்டத்தில், நம்மால் கட்டுப்படுத்த முடியாத மற்றொரு வைரஸ் வெளிப்படும் என்பது உயிரியல் உறுதி. எனவே அடுத்த தொற்றுநோய்க்கு தயாராகும் வகையில் தற்போதைய தொற்றிலிருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.
இதற்காக, வலுப்படுத்தப்பட்ட, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் நிலையான நிதியளிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு தேவை எனக்கூறிய கேப்ரியேசஸ், இது தொற்றுநோய்களுக்கு விரைவான எதிர் தாக்குதலையும், சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்கான ஒரு புதிய வழிமுறை எனவும் தெரிவித்தார்.