
பிரதமரின் உலக நகர தின செய்தி
நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலகினதும் கவனத்தை திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியின் தனித்துவமான பிரதிபலிப்பாகும். எனினும் நகர்ப்புற வாழ்க்கை சூழலை நிலையான எண்ணக்கருவின் ஊடாகவே நாம் ஊக்குவிக்க முடியும்.
காலநிலை மாற்ற விளைவுகளை எதிர் கொள்ளக்கூடிய நகரங்களை நிர்மாணிப்பது எம் மத்தியில் காணப்படும் பாரிய சவாலாகும். அதற்கான கொள்கை தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
சமீபத்திய வரலாற்றில் நகர அபிவிருத்தி தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதற்கு கொள்கை ரீதியில் நிலையான நகர்ப்புற சூழலை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
ஒழுங்கற்ற நகரமயமாக்கலின் விளைவாகவே நகரை அண்மித்த குடிசைகளும், சேரிகளும் தோற்றம் பெறுகின்றன. நகர அபவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் கௌரவ பிரதமர் என்ற ரீதியில் நிலையான அபிவிருத்தியின் ஊடாக உயர் வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தி கொடுத்து நிலையான நகர வசதிகளை மக்கள் அனுபவிக்க கூடிய வகையில் மக்களுக்கு முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பாகும்.அதற்காக நகரமயமாக்கலின் அபிவிருத்தி இலக்கை அடைவதன் மூலம் சிறந்த நகரம் மற்றும் நல்ல வாழ்க்கை முறைக்காக அனைவரும் ஒன்றிணைவார்கள் என நம்புகின்றேன் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.