
புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர், கவர்னர் நேரில் அஞ்சலி
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் 1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனாக பிறந்த அவர், கடந்த 2002 ஆம் ஆண்டு அப்பு என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானதால், ரசிகர்களால் அப்பு என அழைக்கப்பட்டார்.
29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ள புனித், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல தளங்களில் பணிபுரிந்தவர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கன்டீரவா மைதானத்தில் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.