
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நீர்ப் பாசன கால்வாய் மற்றும் வீதியோரத்தில் குப்பைகள் போடப்பட்டு நீர் வழிந்தோட முடியாத நிலையில் காணப்படுகின்றது.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நீர்ப் பாசன கால்வாய் மற்றும் வீதியோரத்தில் காணப்படுகின்ற வடிகால் எனபற்றில் குப்பைகள் போடப்பட்டு நீர் வழிந்தோட முடியாத நிலையில் காணப்படுகின்றது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட கரடிப்போக்கு சந்தியில் இருந்து உருத்திரபுரம் செல்லும் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமல் நீர்ப்பாசன வாய்க்கால்களில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வழிந்தோடுவதில் பெரும் சிரமங்கள் காணப்படுவதுடன் நீர்ப்பாசனக் கால்வாய்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.