
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (28) பிற்பகல் கொட்டாஞ்சேனை புனித லுசியா பேராலயத்தில் வைத்து குறிப்பிட்டார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் இணைந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குடியிருப்பில் 19 பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் கையளிக்கப்பட்டன.
வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமானம் பெறுவோர் என்ற அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்ட 33 பயனாளி குடும்பங்களுக்கு இவ்வாறு புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வீடுகளினதும் மதிப்பு 4 மில்லியன் ரூபாயாகும்.