
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொப்பி மலர் அணிவிப்பு
இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (26) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர்.
உலகளாவிய ரீதியில் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் உலக பொப்பி மலர் தினம் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதியாகும்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக உலக பொப்பி மலர் தினத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி மிகவும் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
பொப்பி மலர் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் பிரதானமாக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட வருடாந்த சஞ்சிகையான "Veteran" இதன்போது அச்சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உபுல் பெரேராவினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.