சினிமா செய்திகள்
ஒரே படத்தில் அசுர வளர்ச்சியில் சிம்பு
சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இ
50 நாட்களை கடந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல்
பிக்பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே காதல் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும். யுத்த களமாக இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வா
ரவீணா இளம் நடிகருடன் நெருக்கமான வீடியோக்களை வெளியிடுவதால் ரசிகர்கள் அதிருப்தி
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா, ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்
நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கத
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆ
மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்து அதிர வைத்த சாக்ஷி
மாடர்ன் டிரஸ்சில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல ப
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா ல
மாநாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக
மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளிபோனது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்த
கமல்ஹாசன், கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொ
ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஜெனிலியா
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களில
Ads
 ·   · 2263 news
  •  · 2 friends
  •  · 3 followers

அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதை -

அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதையாக விவசாயிகளின் நிலை மாறியுள்ளதென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ராகலையில் நேற்று (25) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட அரிசி விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிகரிக்க போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட கேஸ் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட சீனி விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது 5/- ரூபா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. இது ரெயிலர் மாத்திரமே. மெயின் பிக்சர் வர இருக்கிறது. அதில் பெட்ரோல், டீசல் விலை 20/- முதல் 30/-ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளது.
சேதன பசளை என்பது நல்ல திட்டம். அதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை ஓரே இரவில் நிறைவேற்ற நினைப்பது. முட்டாள்தனம். படிப்படியாகவே அதனை செய்ய வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் தங்களது சுயலாபத்திற்காக இரசாயன உர இறக்குமதியை தடை செய்து ஒட்டுமொத்த விவசாயிகளையும் பள்ளத்தில் தள்ளியுள்ளது.

இதனால் மலையகத்தில் சிறிய மற்றும் பெரிய அளவு விவசாயம் செய்யும் இளைஞர்கள் பெரிதும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது போதாத குறைக்கு கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் விவசாய பயிர்கள் அழிவடைந்துள்ளன.

எனவே, மலையக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரம் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்பட வேண்டும். இன்று ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினை பெரும் போராட்டமாக மாறியுள்ளது.

ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்தை பெற்றோர் கையிலெடுத்து நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 202
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads