Category:
Created:
Updated:
ஆபத்தான நுண்ணுயிர்கள் உள்ளடங்கியதாக உறுதி செய்யப்பட்ட கரிம உரத்தை பலவந்தமாக நாட்டிற்கு வழங்குவதற்காக சீன நிறுவனத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.நேற்று (23) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என துறைமுக ஆணையக தலைவருக்கு விவசாய அமைச்சின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.