சினிமா செய்திகள்
விதிமுறைகளை மீறியதற்காக கமலுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்
'மாமனிதன்' படத்தின் டீசர் வெளியானது
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு முப்பது
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்
எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா
நான் மிகமிக துணிச்சலான பெண்: சோனியா அகர்வால்
‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்த
ஜூலியை ஏமாற்றிய காதலன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஜூலி. இதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஜ
கொரோனாவிலிருந்து மீண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல்
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த வாரம் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை
தனக்கு ஜோடியாக ராஷிகண்ணாதான் வேண்டும் என்ற விஜய் சேதுபதி
முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வ
வலிமை படம் பார்த்து வினோத்தை புகழ்ந்து தள்ளிய அஜித்
அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அஜித்தின் நடிப்பில் எந்த படமும் வெளி
நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்
நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறிய அர்ஜுன்
திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை மீ டூ என்ற ஹாஷ்டாக் மூலம் சோஷியல் மீடியாவில் ப
மீண்டும் முதலிடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா
சின்னத்திரை ரசிகர்கள் விஜய் டிவியின் சீரியல்களை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே முதலிடத்தை பிடிக்கும் பாரதிக
Ads
 ·   · 2338 news
  •  · 2 friends
  •  · 3 followers

இலங்கைக்கும் பஹ்ரைனுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள்

இலங்கை மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயான அரசியல் ஆலோசனைகளின் முதலாவது அமர்வு ஒக்டோபர் 21 மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், அரசியல் ஆலோசனைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2009 இல் கைச்சாத்திடப்பட்டது.

தற்போதுள்ள உறவுகளை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளில் மேலும் மேம்படுத்துவது குறித்து பிரதிநிதிகள் ஆலோசித்தனர். இச்சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, மனிதவளம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, சுகாதாரம், விவசாயம், திறன் அபிவிருத்தி மற்றும் பரஸ்பர நலனுக்கான தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

மேலும், புதிய இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இத்தகைய ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் இந்த சந்திப்பின் போது முன்மொழியப்பட்டது.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்புக்கள் மற்றும் பஹ்ரைனில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் இலவச தடுப்பூசி குறித்த அர்ப்பணிப்பு குறித்து பஹ்ரைன் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். வெளிநாட்டிலுள்ள இலங்கையகளுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் வசதிகளை வழங்கிய பஹ்ரைன் அரசாங்கத்துக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்த பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, திறமையான மற்றும் அரைத் திறன் கொண்ட இலங்கையர்களுக்கான பஹ்ரைனில் உள்ள தொழில் வாய்ப்புக்களை ஆராய்வதற்கு இலங்கை தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியதுடன், பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சின் துணைச் செயலாளர் (அரசியல் விவகாரங்கள்) கலாநிதி. ஷேக் அப்துல்லா பின் அஹமத் அலி கலீபா பஹ்ரைன் தரப்பினருக்குத் தலைமை தாங்கினார்.

0 0 0 0 0 0
  • 399
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads