விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல - ஆய்வுக் குழு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த போது, கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயம் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு அச்சம் நிலவி வந்தது. தமிழக அரசின் சார்பிலும் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான விவேக், சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் விவேக் உயிரிழந்ததாக வதந்திகள் பரவின.
விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என்றும், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.