Category:
Created:
Updated:
இலங்கையில் 70 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இருபது வயதைத் தாண்டிய சகலருக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதில் 87 சதவீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இளைஞர் சமூகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.