சினிமா செய்திகள்
பலருக்கும் வாரி வழங்கிய நடிகையர் திலகம் சாவித்ரி
ஆந்திராவை சேர்ந்தவர் சாவித்ரி. இவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரின் தந்தை மரணமடைந்துவிட வளர்ந்தது எல்லாம் உறவினர் வீட்டில்தான். சிறு வயது முதலே
நடிகர் கரண்
நடிகர் கரண் 1969 ஆம் ஆண்டு சென்னையில் ரகு கேசவன் என்ற பெயரில் பிறந்தார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1974 ஆம் ஆண்டு ராஜஹம
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் எமது மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கொவிட் நிலைமை எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர்களுடைய எண்ணிக்கை குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொடர்ந்துமாக எமது மாவட்டத்தினுடைய மக்கள் தங்களுடைய அன்றாட விடயங்களை செய்கின்றபொழுது தங்களையும், தங்கள் சார்ந்தவர்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.அதேவேளை, எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களிற்கு குறைந்ததான மாணவர் தொகை கொண்ட ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.அந்த வகையில் எமது மாவட்டத்தில் 52 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த 52 பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு வேண்டியதானமுன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இன்றைய தினம் ஆராயப்பட்டது.அதற்கு ஏற்றதான விடயங்களை கல்வி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதேவேளை குறித்த நாளில் பாடசாலை ஆரம்பிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல் நிலைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவ்வந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக கண்காணிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது. 18, 19 வயது மாணவர்களிற்கான தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகளும் வரும் 21ம் திகதி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுதுவரை 7057 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 166பேர் நோயாளர்களாக சிகிச்சை பெற்ற வருகின்றனர். நேற்றைய தினம் 14பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இறப்பு வீதமும் குறைந்தே காணப்படுகின்றது.ஒவ்வொரு வயது பிரிவினராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கும், பின்னர் 30 தொடக்கம் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தது.அந்த வகையில் எமது மாவட்டத்தில் 38428 பேர் தடுப்பூசி ஏற்றாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் இன்மையைதான் அவர்கள் காண்பித்திருக்கின்றார்கள். அதேவேளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பின்னிக்கின்றார்கள்.அவ்வாறானவர்களை ஊக்குவித்து அவர்களிற்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ிகராம மட்டத்திலே வீடு வீடாக சென்று அவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.

  • 581
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads