Category:
Created:
Updated:
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்தார்.இது குறித்து கலந்துரையாட தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் வாரத்தில் கூட உள்ளதாக அவர் தெரிவித்தார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தடுப்பாடு பிரச்சினையை தீர்ப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.