ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா மரியாதை
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. தனது பொன்விழா ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் செல்க மரியாதை செலுத்தினர்.
சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர். முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் தடவையாகும்.
இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர் என்றார்.