Category:
Created:
Updated:
தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், ‘சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏற்றனர்.