












ஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்
ஐதராபாத்தின் சைதாபாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியில் ஆறு வயது சிறுமி கடந்த 9 நாட்களாக காணாமல் போயுள்ளார். இதைத் தொடர்ந்து,பல இடங்களில் தேடப்பட்டு வந்த நிலையில், சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்தது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. பக்கத்து வீட்டுக்காரரான பல்லிகொண்ட ராஜு தலைமறைவானான். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, பல்லிகொண்ட ராஜு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்ததுள்ளான்.
தலைமறைவான குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பல்லிகொண்ட ராஜு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டது. போலீசாரும் அவனை தேடி வந்தனர். இரு கைகளிலும் பச்சைக் குத்தியிருப்பான், ஒரு கையில் மௌனிகா என்னும் பெயர் பச்சைக் குத்தப்பட்டிருக்கும், நீண்ட முடியுடன் இருப்பான் உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் வெளியிட்டிருந்தனர்.
ஹான்பூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்தனர். அதில், தேடப்பட்டு வந்த பல்லிகொண்ட ராஜுவின் அங்க அடையாளங்கள், அந்த சடலத்தோடு ஒத்துப் போனது தெரிய வந்தது.
உயிரிழந்தது சிறுமி பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பல்லி கொண்ட ராஜு என்று போலீசார் உறுதி செய்தனர். ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். ஈவு இரக்கமில்லாமல் சின்னஞ் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பல்லிகொண்ட ராஜுவுக்கு, சரியான தீர்ப்பு கிடைத்து விட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.