சினிமா செய்திகள்
சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறார் சமந்தா
உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் த
சினிமாவில் நடிக்க தொடங்கி 13 ஆண்டுகள்...... யோகிபாபு நெகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் 2009-ல் 'யோகி' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது
வசூல் சாதனைப்படைத்தது 'பொன்னியின் செல்வன்'
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை ரூ.665 கோடி வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது
'பூமர் அங்கிள்' படத்தின் டிரைலர் வெளியானது
யோகி பாபு, ரோபோ சங்கர், ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். ம
'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா படம் 2002-ல் திரைக்கு வந்தது. நாயகியாக மனிஷா கொய்ரலா வந்தார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இர
விரைவில் மீனாவின் திரிஷ்யம் 3-ம் பாகம்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத
வணிக படங்களில் நடிக்க விரும்பாத விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்ன
ஹன்சிகா கொடுத்த பேச்சிலர் பார்ட்டி
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பி
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் திருமணம்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்த
'துணிவு' படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்
Ads
 ·   · 5058 news
 •  · 3 friends
 • I

  7 followers

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடைபிடிக்கும் தனித்துவ தலைமை

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி பற்றி தி.மு.க உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ புகழ்ந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வகித்த செங்கோட்டையன், ஒன்பது முறை சட்டசபையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது எனப் புகழாரம் சூட்டுகிறார். 

 

செங்கோட்டையனின் பேச்சு வெறுமனே ஸ்டாலினின் தலைமைக்கு கொடுக்கப்படும் பாராட்டாக மட்டுமில்லை, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, அவர்கள் செய்ய தவறிய விஷயங்களை சுட்டிக்காட்டும் விதமாகவே இருக்கின்றது. யாரும் எதிர்பாராத செங்கோட்டையனின் கருத்து அ.தி.மு.க வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே தி.மு.க.வினரால் அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது, அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தது தி.மு.க தரப்பு. 

 

தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இருந்த காரணத்தினால் அவை வினியோகிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்ட நிலையில், மாணவர்கள் நலனுக்காக நீக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு நேரடியாக உத்தரவிட்டார் ஸ்டாலின். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர். 

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்வது, மீண்டும் ஆட்சி மாறினால், தி.மு.க அரசின் திட்டங்களைக் கிடப்பில் போடுவது என்ற பதில் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த அரசியல் கலாச்சாரத்தைத் தான் தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படியான அரசியல் பண்பாட்டில் வந்த தமிழக அரசியல் சூழலில், ஸ்டாலினின் செயலும் நடவடிக்கையும் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி நேரத்தின்போது எழுப்பிய வினாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

இப்படி பாராட்டுகளை பெற்று வரும் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து மாற்றுக் கட்சி என்ன நினைக்கிறது என்று கேட்க, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை தொடர்பு கொண்டோம். அவர், ஒரு மாற்றுக் கட்சியினரை தமிழக அரசு மதிக்கும் போக்கு கட்டாயம் வரவேற்க்கத்தக்கது தான். அரசியல் நாகரீகம் அறிந்து யார் செயல்பட்டாலும் அதற்கு பாராட்டலாம். அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலானது தொடருமா என்பது கேள்விக்குறி என்று கூறினார். 

 

அரசியல் ஆதாயத்துக்காகவும், பொது வெளியில் நற்பெயரை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே முதல்வர் ஸ்டாலின் இப்படி நடந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுப்புவோருக்கு எல்லாம் பதில் கூறும் விதமாக, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறுகையில்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அதை பின்பற்றும் முதல்வர் ஸ்டாலின், மற்ற கட்சியினரை கண்ணியத்தோடும் மாண்போடும் நடத்துகிறார். 

 

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என அனைவருமே தங்களை ஒரு மன்னரைப் போலவே எண்ணிக் கொண்டார்கள். அதனால், அவர்களால் மாண்போடு நடந்துகொள்ள முடியவில்லை. 

 

முதல்வர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு என்பதை நன்கு அறிந்தவர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் அதற்குரிய ஆளுமையுடன் நடந்து கொள்கிறார் என்று விளக்கினார்.

 

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 408
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads